தமிழ்நாடு

கடலூரில் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

கடலூரில் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Rasus

கடலூரில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூஜை பொருட்களின் விற்பனை இந்த கார்த்திகை மாதத்தில் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு மழையாலும், கடந்தாண்டு வறட்சியாலும் கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால், கார்த்திகை மாதம் விரதம் இருந்து மேற்கொள்ளும் பூஜைகளில் பெரியளவில் மக்கள் ஈடுபடாததால் அந்த பொருட்களின் விற்பனையும் மந்தமடைந்தது.

ஆனால், இந்தாண்டு பருவ மழை கைகொடுத்துள்ளதால், கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்கிவிட்டனர். அதனைத்தொடர்ந்து பலர் இன்று ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்கு விரதம் மேற்கொள்வதற்காக ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.