தமிழ்நாடு

பூஜை பொருட்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

பூஜை பொருட்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

webteam

சென்னையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பூஜைப் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மக்களவைத் தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் அமல் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும்‌ தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ சிக்னல் அருகே அண்ணாசாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த பூஜை பொருட்கள், ரூ.38 ஆயிரம் மதிப்பிலான இந்திய பணமும், 20 ஆயிரம் மதிப்பிலான இலங்கை நாட்டு ரூபாயும் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் குறித்து கால் டாக்சி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் பூஜை பொருட்கள் குறித்த ஆவணங்களும், பணம் குறித்த ஆவணங்களும் கேட்டனர். ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பூஜை பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது அண்ணா சாலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.