மழை பெய்ய வேண்டியும், மலை வளம் செழித்து மக்கள் வாழ்வு வளம் பெறவும் தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் கருப்பசாமிக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி பகுதியில் வனகாளியம்மன் கோயில் உள்ளது. தமிழக வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் வளாகத்தில் கருப்பசாமிக்கென்று தனிக்கோயில் இருக்கிறது. இதனை கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த தமிழர்களும், மலையாள மக்களும் இணைந்து வணங்குகின்றனர்.
மழை வேண்டியும், மலை வளம் செழித்து மக்கள் வளம்பெற வேண்டி 14 ஆண்டுகளுக்குப் பின் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் மதுபானம், சுருட்டு ஆகிய பூஜைப்பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கருப்பசாமி விக்ரகத்தில் மதுபானம் தெளிக்கப்பட்டது. சுருட்டு பற்ற வைக்கப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டது. பொங்கல் வைத்து பொதுமக்கள் கருப்பசாமியை வணங்கினர்.