பெரம்பலூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வணிக நிறுவனங்களில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள மளிகைக் கடை, செல்போன் கடை உள்ளிட்ட 5 கடைகளில் கொள்ளை நிகழ்ந்துள்ளது. ஆயுத பூஜை முடிந்து நேற்று கடைகள் மூடப்பட்ட நிலையில் நள்ளிரவு கடைகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குளிர்பானங்களைக் குடித்து விட்டு பொருட்களை கொள்ளை அடித்ததுச் சென்றது தெரிய வந்துள்ளது. பெரம்பலூர் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.