தமிழ்நாடு

வெல்டிங் கடையில் பற்றிய தீயால் லாரி, கார்கள் சேதம் !

வெல்டிங் கடையில் பற்றிய தீயால் லாரி, கார்கள் சேதம் !

webteam

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழைய பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. 

பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பத்தில் பழைய பொருட்கள் கடை ஒன்று உள்ளது. இங்கு கார், லாரி, பொக்லைன் உள்ளிட்ட பழைய வாகனங்களை வாங்கி அவற்றை உடைத்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெல்டிங் வைக்கும் பணியின் போது கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய டயர்கள், ஆயில் உள்ளிட்டவற்றில் பிடித்த தீ மளமளவென பரவியது. உடனடியாக பொன்னேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அவர்கள் ஒரு லாரியில் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஒரு லாரி நீரை வைத்து தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழந்தது. தீ விபதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பிற தீயணைப்பு வண்டிகள் நிகழ்விடத்துக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இரும்புக்கடைக்கு அருகில் இருந்த வீடு ஒன்றுக்கும் தீ பரவியது. கடும் சிரமத்துக்குப்பின் கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து சேர்ந்தனர். 3 மணி நேர போராட்டத்துக்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.