பொன்முடி
பொன்முடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய பொன்முடி!

PT WEB

முன்னாள் அமைச்சர் பொன்முடி 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியையும் இழந்தார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சொத்து குறித்த முழு விவரங்களை தெரிவித்திருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.