தமிழ்நாடு

இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு !

இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு !

jagadeesh

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். 

அதன்படி ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சக்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்டை, ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் செலவில், 2 கோடியே 5 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.