பொங்கல் பரிசு தொகுப்பு முகநூல்
தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

PT WEB

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

நாள்தோறும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது