தமிழ்நாடு

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

JustinDurai

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது.