தமிழ்நாடு

வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

திரைத்துறையில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு  சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு பதிலுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். மேலும், “50 வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் #IconOf_Golden_Jubilee விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.