தமிழ்நாடு

அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

Rasus

சுகாதாரத்துறையில் தமிழகம் பின் தங்கியதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில் சிறப்பாக இயங்கும் மாநிலங்களை நிதி ஆயோக் பட்டியலிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த தரவரிசை பட்டியலில், சுகாதார துறையில் சிறப்பாக விளங்கும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. ‌ஆனால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் மூ‌ன்றாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. சிறப்பான சுகாதாரத்தை பேணும் பெரிய மாநிலங்கள் வரிசையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறையில் தமிழகம் 3-ஆம் இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு பின்தங்கியது குறித்து முன்னாள் எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ 50 ஆண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திமுகதான் காரணம். சுகாதாரத்துறையில் தமிழகம் பின் தங்கியதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். அனைத்திற்கும் காரணமான திமுக இன்று போராட்டம் நடத்துகிறது

அனைத்து மதத்தினரும் நாட்டுக்காக மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு தான் யாகம் செய்ய முடியும். சாதாரண மனிதர்கள் கோயிலில் யாகம் செய்ய முடியாது. அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா? பிழைப்புக்காக நேற்று முளைத்த அரசியல் விஞ்ஞானிகள் தான் அணுமின் நிலையம் வேண்டாம் என்று கூறுகின்றனர்” என தெரிவித்தார்.