தமிழ்நாடு

“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்

“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது முறையான நடவடிக்கைதான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி செந்தில்குமார். இவர் கடந்த 16ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுகவின் நலனை கருதியே சபாநாயகர் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறேன். 

சபாநாயகர் முறையான நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளார். இதில் விமர்சனம் செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் அடைக்கலம் தேடுவது என்றால், வழிபாட்டுத்தலங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் மாறிவிடும். எனவே தீவிரவாதிகள் ஊடுருவல் விஷயத்தில் தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.