ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் சில அமைப்பினர் சூழ்ச்சி செய்து உள்ளே புகுந்து விடவாய்ப்பிருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும், உச்சநீதிமன்றம் அதை தடை செய்யலாம் என்றார்.
மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.