தமிழ்நாடு

“சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்

webteam

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. அதில் பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் நடந்துகொள்கிறார் என்றும், முறையாக வழக்குகளை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

அதில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிலைகடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக பிறப்பித்த உத்தரவையும், அரசாணையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.