சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடித்து தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.