பொள்ளாச்சி பாலியல் வழக்கு pt desk
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு | வரவேற்கத்தக்க தீர்ப்பு - அதிகபட்ச தண்டனை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சிவபிரசாத்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு அனைவரும் குற்றவாளிகள் என இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில். பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் அந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர் மேலும் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் மதியம் அறிவிக்கப்பட உள்ளது.

Court order

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று பொள்ளாச்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பொள்ளாச்சி நகர திமுகவினர் சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.