தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுவதைத் தடுக்க, சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி விசாரணையை தொடங்கி சிபிசிஐடி காவல்துறையினர், ஏராளமான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். 

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அது தங்களின் விசாரணைக்கு தடங்களை ஏற்படுத்துவதாக அமையும் என சிபிசிஐடி அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் பேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சிபிசிஐடி காவல்துறையினர், பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக‌ எந்த ஆதாரங்களும் இணையதளங்களில் பகிரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.