இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் pt desk
தமிழ்நாடு

பொள்ளாச்சி| ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் - பரபரப்பு

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: சிவபிரசாத்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு நிதி தர முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசும் மற்றும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை திமுக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு சென்றனர்.

இதையடுத்து அங்கு பெயர் பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த பொள்ளாச்சி என்ற வாசகத்தை கருப்பு மையால் அழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருடன் வந்த திமுகவினர் அப்பகுதியில் உள்ள பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் உள்ளே சென்று பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.