தமிழ்நாடு

பொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

பொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

rajakannan

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பான கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும். கைது செய்யப்பட்ட 4 பேரை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகி புகாரளிக்கலாம். 

இந்தச் சம்பவத்தில் அரசியல் கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை. தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையை சொல்வதென்றால், தன்னுடைய தொகுதி என்பதால் அவரே (பொள்ளாச்சி ஜெயராமன்) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னிடம் வலியுறுத்தினார்.

புகாரளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசு, சபரீஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தன. பொள்ளாச்சி நாகராஜ் ஜாமீனை எதிர்த்து தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.