கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் விடுதி உள்ள பகுதியில் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சொந்த வீடுகளுக்கு செல்வதற்கே, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.அரசியல் தலைவர்களின் வாகனங்கள், அதிவேகத்தில் அடிக்கடி செல்வதால் ஆடுமாடுகளை ஓட்டிச் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றமான சூழல் தங்களையும் தொற்றிக்கொண்டு, அண்றாட பணிகளை பாதித்துள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.