தமிழ்நாடு

தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

webteam

ரம்ஜான் திருவிழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் உண்மையான வாழ்வு, சகிப்புத்தன்மை, ஈகை உள்ளிட்டவற்றை குரான் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். முகமது நபி போதித்த தத்துவங்களை பின்பற்றி சமாதானம், ஒற்றுமை ஓங்க உழைக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியர்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும், சகோதரத்துவம் ஓங்கட்டும் என கூறியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், ஜிகே வாசன், பாரிவேந்தர் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.