இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ஆயிரத்து 640 மையங்கள்
அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 43
ஆயிரம் மையங்களும், ஆயிரம் நடமாடும் குழுக்களும், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் அருகில்,
சோதனைச்சாவடிகள் என பயண வழிகளில் ஆயிரத்து 652 மையங்களும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் மூலம் 70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் சொட்டு
மருந்து போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.