பெண்ணை மிரட்டிய போலிசார் புதியதலைமுறை
தமிழ்நாடு

“கணவன் - மனைவி தான் பீச்சுக்கு ஜோடியா வரணுமா?” .. மிரட்டிய காவலரை கேள்வியால் துளைத்த பெண்! வீடியோ

சம்பந்தப்பட்ட இளம் பெண் நீங்கள் எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் கணவன் மனைவி தான் இங்கு வர வேண்டுமா என்று காவலரைப் பார்த்து கேட்டுள்ளார்.

PT WEB

சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது ரோந்து பணியில் இருந்த காவலர் நீங்கள் கணவன் - மனைவியா என கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இளம் பெண் மற்றும் அவரது நண்பர் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிற போது அங்கு வந்த மெரினா காவல் நிலைய காவலர் ராஜ்குமார் இருவரையும் நீங்கள் கணவன் மனைவியா என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு சம்பந்தப்பட்ட இளம் பெண் நீங்கள் எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள். கணவன் மனைவி தான் இங்கு வர வேண்டுமா என்று காவலரைப் பார்த்து கேட்டுள்ளார்.

தொடர்ந்து காவலர் இருவரையும் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.