பிரதமர் மோடி வருகையால் தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு fb
தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகையால் தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PT WEB

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், திருச்சி, தூத்துக்குடியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சூழலில், பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பிரதமரின் வருகையையொட்டி நெல்லை- தூத்துக்குடி சாலையில் கனரக, சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேப் போன்று நெல்லை, தூத்துக்குடி இடையே வாகன போக்குவரத்தும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தொடர்ந்து பிரதமர் மோடி திருச்சி செல்வதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்குகிறார். இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து நட்சத்திர விடுதி செல்லும் பாதை முழுவதிலும் உள்ள கட்டடங்கள், வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நட்சத்திர விடுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 27ஆம் தேதி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள திருச்சியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் பயணிக்கவுள்ளதால், அதற்கான பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், மத்திய பாதுகாப்பு குழுவினர் கலந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டனர்.