ராமேஸ்வரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவல்துறை குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், தனிப்பிரிவு போலீஸ் சரவணன் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 22 மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் அளித்த தீர்ப்பின்படி, சரவணனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சரவணன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.