தமிழ்நாடு

இ-பதிவு அனுமதியோடு இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்: திரும்ப ஒப்படைக்க ஓபிஎஸ் கோரிக்கை

இ-பதிவு அனுமதியோடு இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்: திரும்ப ஒப்படைக்க ஓபிஎஸ் கோரிக்கை

Veeramani

சட்டத்திற்குட்பட்டு இ-பதிவு அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இ-பதிவு முறையை பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதால், அவற்றை திரும்ப தரக்கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவொற்றியூரில் போராட்டம் செய்து வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனங்களின் உதிரிபாகங்கள் திருடுபோகும் சூழல் உருவாகும் என்பதால் வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்