தமிழ்நாடு

ஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!

ஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!

webteam

திருச்சியில் ஒருவழியாக கொள்ளையர்கள் பிடிபட்டதால் தனிப்படையைச் சேர்ந்த 2 போலீசார் மொட்டையடித்துக் கொண்டனர். 

திருச்சி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற கொள்ளையில், ஈடுபட்ட கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் போலீசார் தேடிவந்தனர். கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த முருகன் கும்பலே இதிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், 9 மாதங்களாக திணறி வந்த போலீசார் தற்போது  நிம்மதியடைந்துள்ளனர். 


இந்நிலையில், திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விஜயகுமார், ஒப்பிலியப்பன் கோயிலிலும், ஹரிகரன் என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.