தமிழ்நாடு

‌போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்: தபால்காரரும் கைது

webteam

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாக நேற்று சென்னையில் தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தபால்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இருவரும் அவரவர்களது துறையில் சிந்தாதரிப்பேட்டை பகுதியில் பணி புரிந்து வந்தனர். இவ்விவக‌ரத்தில் மேலும் சில நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாக தனசேகரன் என்ற தபால்‌காரர் கைது  செய்யப்பட்டார். முன்னதாக அப்பகுதியில் இருந்த தலைமைக் காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்‌ட முருகன் சிந்தாதரிப்பேட்டை நுண்ணறிவு பிரிவுத் தலைமைக் காவலர் ஆவார். 3 ஆயிரம் ரூபாய்க்காக போலி ஆவணங்களை வைத்து பாஸ்போர்ட் பெற முருகன் உடந்தையாக இருந்தது தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் பெற ஆள்பிடித்து தருபவர்கள் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தபால்காரரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சில காவல் துறையினர் இதில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.