தமிழ்நாடு

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி: போலீசார் தடியடி

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி: போலீசார் தடியடி

Rasus

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் போலீசார் தடியடி நடத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது. ‌இதில் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர், இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, நடிகர் ஆரி மற்றும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் போது சிலர் காளைகளை அவிழ்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலுசார் தடியடி நடத்தினர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை போலீசார் பிடித்து இழுத்து சென்றனர்.