தமிழ்நாடு

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்: போலீஸ் தடியடியில் ஒருவர் மண்டை உடைப்பு

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்: போலீஸ் தடியடியில் ஒருவர் மண்டை உடைப்பு

Rasus

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மதுபானக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒருவரின் மண்டை உடைந்தது. தடியடியை கண்டித்து பொதுமக்களும் காவலர்கள் மீது கற்களை வீசினர்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் சந்திப்பில் இன்று காலை புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 9 நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும், போராட்டம் கைவிடப்படாததால் போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்கள் மீதும் தடியடி நடந்தது. அமைதியாக சென்ற பெண்கள் மீதும் தடியடி நடத்திய போலீஸ், அங்குசென்ற பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். போலீசாரின் தடியடியில் பொதுமக்களில் ஒருவரின் மண்டை உடைந்தது.

இதனிடையே, போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து, பொதுமக்களும் போலீசார் மீது கற்களை வீசினர். ஜனநாயக முறையில் போராடும் தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது எனக் கூறினர். டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தரவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.