தமிழ்நாடு

“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி

“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி

webteam

இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி போலீசார் காவல்நிலையம் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  

நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்காளர்கள் நீண்ட‌ வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 146 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்து 460 பேர் தேர்தல் பணிகளிலும், 2 ஆயிரத்து 500 காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

இதுகுறித்து பேசிய வசந்தகுமார், “நாங்குநேரியில் பரப்புரையில் ஈடுபட்டால் என்னை கைது செய்யலாம். ஆனால் நாங்குநேரி வழியாக பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டிற்குதான் சென்றேன். நாங்குநேரி வழியாக செல்லக்கூடாது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை கைதி போல அழைத்து வந்தனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.