தமிழ்நாடு

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை - 2 தனிப்படைகள் விசாரணை

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை - 2 தனிப்படைகள் விசாரணை

கலிலுல்லா

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து டிக்கெட் கொடுப்பவரை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொள்ளை நடந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.