தமிழ்நாடு

சாலையோரத்தில் கிடந்த வாக்குச்சீட்டுகள்! - போலீசார் விசாரணை

சாலையோரத்தில் கிடந்த வாக்குச்சீட்டுகள்! - போலீசார் விசாரணை

webteam

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெரம்பலூர் சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டிருந்தன. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து, வாக்குப்பெட்டியில் மக்கள் செலுத்திய வாக்குச் சீட்டுகள் சாலையில் கிடப்பது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த வாக்குச் சீட்டுகளை சேகரித்தனர். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் 6 மாதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

அப்படியிருக்கையில், வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த மறுநாளே, வாக்குச் சீட்டுகளை சாலையில் கொட்டியது யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது, இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டதா? அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திருடப்பட்ட வாக்குச் சீட்டுகளா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.