பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல் வந்ததாக நாமக்கல் காவல்துறையினர் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நாமக்கல் காவல்துறை அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டது.
நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பெருமாள் முருகன் வசிக்கும் இல்லத்துக்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு, பெருமாள் முருகன் தாம் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், தனது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்ததாகவும் தெரிவித்தார். அதைத் திறந்து பார்த்த போலீசார் அதில் புத்தகங்கள் மட்டுமே இருப்பதை கண்டறிந்தனர்.
இதற்கு முன்னர், கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாமக்கல்லில் நடத்திய பிரச்சாரத்தை பெருமாள் முருகன் சமூக வலைதளத்தில் விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மிரட்டல் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.