தமிழ்நாடு

மந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை?: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்!

மந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை?: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்!

webteam

பெண் மந்திரவாதி கூறியதால் தந்தையே 13 வயது மகளை கழுத்து நெரித்த கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த சம்பவம்
குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ளது நொடியூர். அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி தைல மரக் காட்டில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தந்தையே 13வயது மகளை கழுத்து நெரித்து கொன்றது தெரியவந்தது

சிறுமியின் தந்தை பன்னீர் தன்னுடைய 13 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பெண் மந்திரவாதி ஒருவர் எனக் கூறப்படுகிறது.


மூன்றாவது மகளை கொலை செய்துவிட்டால் அதிக செல்வம் சேரும் என பெண் மந்திரவாதி கூறியதாகவும், அதனால் தான் பன்னீர் கொலை
செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெண் மந்திரவாதியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்த தனிப்படை
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமி கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.