தமிழ்நாடு

வாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை

வாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை

webteam

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத  மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அப்பரசம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கௌதமி (25). இவர் காது கேட்காமல் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத் திறனாளி. 

சில மாதங்களுக்கு கௌதமி வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் கௌதமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது குறித்து கெளதமிக்கு சரியாக சொல்லத் தெரியாததால் பெற்றோர்கள் குழம்பி வந்தனர். 

இந்நிலையில் நேற்று பிரசவ வலியால் அவதிப்பட்ட கௌதமியை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து கௌதமியின் பெற்றோர்கள் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.