போதைப்பொருள் pt desk
தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரானுடன் தொடர்பு – 4 பேரிடம் போலீசார் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் குறித்து, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சென்னை கும்பலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெ.அன்பரசன்

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 31ஆம் தேதி கெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கணேசன், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரவி, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் டெல்லியைச் சேர்ந்த விகாஸ் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Drugs

இதையடுத்து அவர்களிடம் இருந்து 25 கிலோ கெட்டமைன் போதைப்பொருள், ஐந்து துப்பாக்கிகள், 50 லட்ச ரூபாய் பணம், சொகுசு கார்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்கள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ராஜா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிப்பாணி இம்ரானோடு தொடர்பில் இருந்ததாக தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து ராஜா, கணேசன், ரவி, மற்றும் விகாஸ் மைதீன் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சி பாணி இம்ரானுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்தும், தலைமறைவு கூட்டாளிகள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.