தமிழ்நாடு

கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்

கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்

webteam

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதிலும், அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். 

சென்னை வேப்பேரியில் உள்ள ஈவேரா சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலைகளில் இருந்த குப்பைகள் கால்வாயின் துவாரத்தில் அடைத்துக் கொண்டது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனைக் கண்ட வேப்பேரி காவல்நிலைய ஆய்வாளர் வீரகுமார்‌ எந்த தயக்கமும் இன்றி, சாலையோர அடைப்பை நீக்கினார். கையுறை கூட ‌அணியாத நிலையில், காவல் ஆய்வாளரின் இத்தகைய செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர். இவரைப் போலவே பணியில் இருக்கும் பல காவலர்கள் துப்பரவு பணியாளர்கள், மீட்பு குழுவினர் உடன் இணைந்து மக்களுக்காக களப்பணியாற்றி வருகிறார்கள்.  

அதேபோல் சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையிலான காவல்துறையினர் ஓட்டேரி பகுதியில் ஆய்வு செய்து,‌தேங்கிய மழைநீரை நீக்கும் நடவடிக்கைகளிலும், போக்குவரத்து நெரிசல் சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.