ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்ததகவலை புதிய தலைமுறையிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தினை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடத்திக் கொள்ள காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதிகோரி சென்னை வேப்பேரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை கோரி மாநிலம் தழுவிய அளவில் வரும் 8ம் தேதி உண்ணாவிரதம் நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்துள்ளனர்.