இயக்குநர் பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 16ம் தேதி இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த மாநில அமைப்பாளர் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த11ம் தேதி அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் பாரதிராஜா, தமிழக அரசை மிரட்டும் வகையிலும், நக்சலைட்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த காவல்துறையினர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.