மதுரையில் மணல் கடத்தல் கும்பலிடம் கையூட்டுப் பெறுவது தொடர்பாக சண்டையிட்ட காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் பெறுவது தொடர்பாக, மதுரை மதிச்சியம் காவல் நிலைய எஸ்.ஐ. பிரேம்சந்திரன் மற்றும் அண்ணாநகர் காவல்நிலைய காவலர் ராம்குமார் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் வீடியோ, வாட்ஸ் அப்பில் வைரலானது.
இதனையடுத்து இருவரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் துறை ரீதியான விசாரணையில் இருவரும் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.