தமிழ்நாடு

மாணவர்களுக்கு குடிநீர் கொடுக்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை: அலங்காநல்லூர் மக்கள்

மாணவர்களுக்கு குடிநீர் கொடுக்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை: அலங்காநல்லூர் மக்கள்

webteam

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் குடிக்க தண்ணீர்கூட காவல்துறையினர் கொடுக்க அனுமதிக்கவில்லை என அலங்காநல்லூர் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர்‌ வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் 21 மணிநேரம் அமைதியான வழியில் போராட்டம் நடத்திய 5 பெண்கள் உட்பட 240 பேர் கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‌தங்க வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.