சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறப்பதால் கிருஷ்ணகிரி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அளித்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். இதனிடையே சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தடையை மீறி பயன்படுத்திய கொடி அந்தக் காரில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கிறது. தமிழகத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறந்து வருவதால் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீஸ் மட்டுமே தந்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து போலீசார் அதிமுக கொடியை அகற்றவில்லை. சசிகலா மாறிய மற்றொரு கார் அதிமுக உறுப்பினர் காராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.