தமிழ்நாடு

2.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்கள் அழிப்பு

webteam

சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 2.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

நாகை மாவட்டம் சீர்காழியில் மதுவிலக்கு பிரிவு உள்ளது. இதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட வெளிமாநில மது கடத்தல் வழக்கில் 2448 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவைகள் அனைத்தையும் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் அழித்தனர். அதாவது, அந்த மதுபாட்டில்கள் சட்டநாதபுரம் புறவழிச்சாலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு பகுதிக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுவாமிநாதன் முன்னிலையில் போலீசார் உடைத்து ஊற்றி அழித்தனர். வெளிமாநில மது பாட்டில்கள் அழிக்கப்பட்டதை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.