மதுரையில் தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரின் வரதட்சணை கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் பூபாலன், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கணவரின் தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி கொடுமை படுத்திவந்துள்ளனர்.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். இதில் குற்றவாளிகளை எப்படி காவலர்கள் கொடுமையாக கையாளுவார்களோ, அதேபோல் தன் மனைவியை தான் சித்திரவதை செய்ததாகவும் அந்த கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆசிரியை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் நேற்று திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தின் கொடுத்த புகாரில், பூபாலன், அவரது தந்தை செந்தில்குமரன் (சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்), மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துவரும்போது, உண்மையை சொல்ல வேண்டி உள்ளது. என்னிடம் அதிகமான ஆதாரங்கள் உள்ளன என காவலர் பூபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், பூபாலன் மற்றும் அவரது தந்தை இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கைதுக்கு பிறகு பூபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலர் பூபாலனுக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாக்கியவதி உத்தரவு