தமிழ்நாடு

கமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

கமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

webteam

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் மீது,‌ இந்து மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். மகாபாரத‌ கதாபாத்திரம் குறித்து, கமல் தெரிவித்த கருத்து கண்டனத்திற்கு உரியது என இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு குழுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.