முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலக போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உமாபதி. கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்த அவர் தாம் பதவி விலக முடிவெடுத்திருப்பதாகவும். இதுதொடர்பாக, சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.