தமிழ்நாடு

வழிப்பறி கொள்ளையர்களை 2 கி.மீ விரட்டிச்சென்று மடக்கி பிடித்த காவல்துறை

வழிப்பறி கொள்ளையர்களை 2 கி.மீ விரட்டிச்சென்று மடக்கி பிடித்த காவல்துறை

Rasus

மதுரை மாவட்டம் வாடிபட்டி, சோழவந்தான் பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை 2 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

வாடிபட்டி மாதாகோயில் அருகே முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 3 சவரன் நகையை வழிப்பறி செய்தனர். முத்துலட்சுமி கூறிய அடையாளங்கள் அடிப்படையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதில், அதே நபர்கள் சோழவந்தானில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரின் 3 சவரன் நகையை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அலங்காநல்லூர் காவல்நிலையக் காவலர்கள் மூவேந்தன், காளிராஜ் ஆகியோர் குமாரம் அருகே வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது காவலர்களின் இருசக்கர வாகனம் மீது மோதிய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

காவலர் காளிராஜ் அதில் காயம‌டைந்தார். இருப்பினும், இரண்டு காவலர்களும் கொள்ளையர்களை 2 கிலோ மீட்டர் ஓடி விரட்டி பிடித்தனர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த வெள்ளச்சாமி, கல்லுப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச்சென்று கைது செய்த காவலர்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.