தமிழ்நாடு

குடிபோதையில் லஞ்சம் கேட்ட போலீஸ்: லாரி ஓட்டுனருடன் முற்றிய வாக்குவாதம்

குடிபோதையில் லஞ்சம் கேட்ட போலீஸ்: லாரி ஓட்டுனருடன் முற்றிய வாக்குவாதம்

webteam

சென்னை மேடவாக்கத்தில் லாரி ஓட்டுநரிடம் குடிபோதையில் இருந்த போக்குவரத்துக் காவலர் லஞ்சம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் லாரி மூலம்‌ தண்ணீர் விநியோகம் செய்யும் ஓட்டுநர் பெருமாளிடம்‌ போக்குவரத்துத்துறை காவலர் ஜெயபால் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேடவாக்கத்தில் காவலர் ஜெயபால், லாரியை நிறுத்த சொல்லியதற்கு நிற்காமல் போனதால், ஆத்திரமடைந்த காவலர் லாரியை மடக்கிப் பிடித்து தவறான வார்த்தைகளால் ஓட்டுநரை திட்டியதால், பதிலுக்கு அவரும் திட்ட, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.