மதுரை பகுதியில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கான ஆன்லைன் செயலி மூலம் 45 நாட்களில் பணம் இரட்டிப்பு, அதிக லாபம் என ஆசைவார்த்தைகள் கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி நடந்துள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் பிரிவிலும் 1930 இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும், அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியால் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிலும், 1-9-3-0 என்ற இலவச உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம். அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.